‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்தை கொன்றது யார்? - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், தனது கதாபாத்திரத்தின் மரணம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்தை கொன்றது யார்? - கீர்த்தி சுரேஷ் விளக்கம்
Published on: 

சென்னை,

‘டோரதி’ படத்தில் அந்தக் கதாபாத்திரம் எப்படி இறந்தது என்பதை நாம் ஏன் காட்ட வேண்டும்? அது எப்படி நடந்திருக்கலாம் என்பதை ரசிகர்களாகிய நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

‘டோரதி’ திரைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. கடந்த செப்டம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1990-களில் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவான இப்படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த சனந்தின் நடிப்பும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆணாகவும் பின்னர் திருநங்கையாகவும் இருவேறு தோற்றங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, திருநங்கையாக மாறிய பிறகு அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் நளினமும் கதைக்கு உயிரோட்டம் அளித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மர்மம்

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கொல்லப்பட்டிருக்கும். ஆனால், அந்தக் கதாபாத்திரம் யாரால், எப்படி கொல்லப்பட்டது என்பது படத்தில் தெளிவாகக் காட்டப்படவில்லை. இதனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

கார்த்திக் சுப்புராஜிடம் கேட்ட கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், தனது கதாபாத்திரத்தின் மரணம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கும் இந்தக் கேள்வி மனதில் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். ஆனால், கதையைத் திறந்த முடிவுடன் வைத்திருக்கவே அவர் விரும்பினார். பொதுவாகப் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரம் எப்படி இறந்தது, அதற்கான காரணம் என்ன என்பதைக் காட்டுவார்கள். அதனால் நமக்கும் இயல்பாகவே இதுபோன்ற கேள்விகள் எழும். ஆனால், ‘டோரதி' படத்தில் அந்த வழக்கமான முறையை உடைக்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விரும்பினார். அந்தக் கதாபாத்திரம் எப்படி இறந்தது என்பதை நாம் ஏன் காட்ட வேண்டும்? அது எப்படி நடந்திருக்கலாம் என்பதை ரசிகர்களாகிய நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

கீர்த்தி சுரேஷின் இந்தப் பதில் தற்போது ‘டோரதி’ படத்தின் மர்மமான காட்சிகள் குறித்து ரசிகர்களிடையே மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X