''மிராய்'' படத்தில் ஸ்ரீ ராமராக நடித்தது யார் தெரியுமா?

இதன் கிளைமேக்ஸ் காட்சியில் ராமர் இடம்பெற்றிருந்தார்.
சென்னை,
தேஜா சஜ்ஜாவின் சூப்பர் ஹீரோ திரைப்படமான மிராய் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம், கவர்ச்சிகரமான கதை, பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் ஆகியவற்றால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் கிளைமேக்ஸ் காட்சியில் ராமர் இடம்பெற்றிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கிடையில், ராமரின் வேடத்தில் நடித்தது யார்?, அது ஏஐ-யால் உருவாக்கப்பட்டதா? என்று மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.
இப்போது ராமரின் வேடத்தின் பின்னணியில் உள்ள மர்மம் அவிழ்ந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் கவுரவ் போராதான் இதில் ராமராக நடித்திருக்கிறார். அவரது தோற்றம் விஎப்எக்ஸ் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story






