'ஏன் இப்படி பண்றீங்க...' ரசிகர்களிடம் ஆதங்கப்பட்ட தமன்னா


ஏன் இப்படி பண்றீங்க... ரசிகர்களிடம் ஆதங்கப்பட்ட தமன்னா
x

தமன்னாவை சிலர் பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்ததால் அவர் ஆதங்கப்பட்டார்.

மும்பை,

பால்நிற மேனி நடிகை என்று வர்ணிக்கப்படும் தமன்னா, எங்கு சென்றாலும் அவரை பின்தொடரும் கூட்டம் உண்டு. குறிப்பாக 'பாப்பரசி' என்று அழைக்கப்படும் வகையில், புகைப்பட கலைஞர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று அவரை புகைப்படம் எடுத்து தள்ளுவார்கள். இந்தநிலையில் மும்பையில் தனது இல்லத்தில் இருந்து சென்ற தமன்னாவை சிலர் பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்தனர்.

அப்போது தமன்னா ஒரு சலூன் கடைக்குள் சென்றார். அங்கும் சிலர் நுழையவே, கடுப்பான தமன்னா, 'சலூனுக்கு எதுக்கு வரீங்கப்பா... ஏன் இப்படி பண்றீங்க...' என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்றினர். இதனால் தமன்னா கடுமையான 'அப்செட்' அடைந்தாராம்.

1 More update

Next Story