வீடுகளாக வாங்கி குவிப்பது ஏன்? நடிகை ராஷ்மிகா விளக்கம்

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
வீடுகளாக வாங்கி குவிப்பது ஏன்? நடிகை ராஷ்மிகா விளக்கம்
Published on

நடிகைகள் பலர் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், ஓட்டல் தொழில், உடற்பயிற்சி மையங்கள் அமைத்தல், நகை வியாபாரம் என்று வேறு தொழில்களில் முதலீடு செய்து மேலும் வருவாய் ஈட்டுகிறார்கள். அந்த வரிசையில் ராஷ்மிகா மந்தனா வீடுகளாக வாங்கி குவிக்கிறார். சமீபத்தில் கோவாவில் புதிதாக வாங்கிய வீட்டின் நீச்சல் குளத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதுபோல் ஐதராபாத், மும்பை, கூர்க் உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் வீடு வாங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ராஷ்மிகா கூறும்போது, நான் எந்த பகுதியில் நடிக்கிறேனோ அங்கு ஓட்டலில் தங்குவதை விரும்புவது இல்லை. ஒரு நாள் என்றால் பரவாயில்லை. நிறைய நாட்கள் படப்பிடிப்புக்காக வெளியூரில் தங்கும்போது நமது சொந்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் தவிர எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவளை விட்டு அதிக நாட்கள் பிரிந்து இருக்க முடியாது. வீடு இருந்தால் பிரச்சினை இருக்காது என்ற வகையிலும் நான் பல இடங்களில் வீடு வாங்கி வைத்து இருக்கிறேன். தெலுங்கு படங்களில் நடித்தபோது ஐதராபாத்தில் வீடு வாங்கினேன். இந்தி படங்களில் நடிப்பதால் மும்பையிலும் வீடு வாங்கி இருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com