திருமணத்தை தனுஷ் பட நடிகை நிறுத்தியது ஏன்?

தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரீன், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
திருமணத்தை தனுஷ் பட நடிகை நிறுத்தியது ஏன்?
Published on

தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரீன், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

மெஹ்ரீனும் அரியானா முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் பேரனும் அரசியல்வாதியுமான பவ்யா பிஷ்வோவும் காதலித்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணத்தை நடத்துவற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதாக மெஹ்ரீன் அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், நானும் பவ்யா பிஷ்வோவும் எங்கள் நலன் கருதி திருமணத்தை ரத்து செய்கிறோம். இனிமேல் பவ்யாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது அடுத்த படங்களின் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த உள்ளேன்'' என்று கூறினார். இது பரபரப்பானது. இந்த நிலையில் திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று காதலர் குடும்பத்தினர் தடை விதித்ததாகவும் அதனை ஏற்காமல் திருமணத்தை மெஹ்ரின் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com