தேர்தல் பறக்கும் படையினரிடம் நடிகை நமீதா வாக்குவாதம் செய்தது ஏன்?

தேர்தல் பறக்கும் படையினரிடம் நடிகை நமீதா வாக்குவாதம் செய்தது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பறக்கும் படையினரிடம் நடிகை நமீதா வாக்குவாதம் செய்தது ஏன்?
Published on


சேலம் புலிக்குத்தி பகுதியில் காரில் சோதனையிட்ட பறக்கும் படையினருடன் நடிகை நமீதா நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நமீதாவின் கணவரும், நடிகருமான வீரேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி நமீதாவும், நானும் ஏற்காட்டில் படப்பிடிப்புக்காக காரில் சென்றோம். இரவு 2.30 மணி அளவில் காரின் பின் இருக்கையில் நமீதா தூங்கிக்கொண்டு இருந்தார். 3 இடங்களில் எங்கள் காரை நிறுத்தி சோதனை போட்டனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். சேலத்திலும் தேர்தல் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அதில் ஒருவர் குரூரமாக நடந்து கொண்டார்.

காரின் பின் இருக்கையில் சோதனை செய்ய வேண்டும் என்றார். எனது மனைவி தூங்குகிறார் தேவைப்பட்டால் சோதனை செய்யுங்கள் என்றேன். ஆனாலும் அவர் பின்பக்க கதவை திறந்தார். அப்போது கதவில் சாய்ந்து தூங்கிய நமீதா வெளியே சாய்ந்தார். அதன்பிறகும் அவர் சோதனையை தொடர்ந்தார். பின்னர் நமீதாவின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என்றார். அதில் தனிப்பட்ட சில பொருட்கள் இருந்ததால் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் சோதனை செய்யவேண்டும் என்று நமீதா வாதாடினார். அப்படி சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. இதனால் நமீதா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்று தவறாக பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com