

சென்னை,
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் 'வாரணாசி' படத்தில் பிரியங்கா சோப்ரா முக் கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 6 ஆண்டுக்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி இந்திய படம் இதுவாகும்.
இந்தச்சூழலில் படவிழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா. பாலிவுட் சினிமாவை விட்டு ஹாலி வுட் சினிமாவுக்கு சென்றது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
பாலிவுட் சினிமாவை விட்டு விலக நான் நினைத்தது கிடையாது. ஆனாலும் சில காரணங்களால் பல கட்டுப்பாடுகள் என் மீது விதிக்கப்படுவதை நான் அங்கு உணர்ந்தேன். அதேவேளை என் நிலையில் இருந்து நான் இன்னும் வளர துடித்தேன். இதனால் ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றேன்.
என்னதான் இருந்தாலும் இந்திய சினிமா மீதான என் நேசமும், பாசமும் போகாது. பாலிவுட் சினிமா, ஹாலிவுட் சினிமா... எது பெரிது? என்ற எல்லைக்கு நான் செல்ல விரும்பவில்லை.
இதுதான் உன் எல்லை என்று கூறி, என்னை யாரும், எந்த வரையறைக்குள்ளும் வைத்துவிட முடியாது. எனக்கு எல்லை என்பதே கிடையாது.