நடிகை சமந்தாவை பிரிந்தது ஏன்? முன்னாள் கணவர் நாகசைதன்யா விளக்கம்

நடிகை சமந்தாவை பிரிந்தது ஏன்? முன்னாள் கணவர் நாகசைதன்யா விளக்கம்
Published on

நடிகை சமந்தாவும் நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் விவாகரத்து குறித்து தற்போது நாகசைதன்யா அளித்துள்ள பேட்டியில், "சமந்தா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிறது.

நாங்கள் பிரிந்தாலும்கூட சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை கவுரவிக்கிறேன். உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைத்தளத்தில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே பிரச்சினை ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. முதலில் நான் அந்த வதந்தி குறித்து அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர்மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் சில ஊடகங்களில் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைக்காமல் இருக்கிறோம் என்று சித்தரித்தது வேதனைப்படுத்தியது. எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது மனிதரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com