இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்..?... மனம் திறந்த நடிகை

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார்.
இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்..?... மனம் திறந்த நடிகை
Published on

சென்னை

சினிமாவில் புதுப்புது முயற்சிகளை செய்து, அதில் வெற்றியும் கண்டவர் பார்த்திபன். இவரின் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் வியக்கத்தக்க படம் தான் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இதனை எடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இரவின் நிழலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் பிரிகிடா. ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் 'பவி டீச்சர்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர். பிரிகிடா 'இரவின் நிழல்' படம் குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

இப்படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார் பிரிகிடா. அவ்வாறு நடித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதன்படி, படத்தின் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது. இதைப் பார்த்திபன் சார் என்னிடம் சொன்னபோது, இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.

சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி செய்யும் பெண் தான் நான். ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானது. அதற்கு அப்படியொரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார். ஆனால், இதை என் பெற்றொர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு பெரிய நெருடலாக இருந்தது.

இதையடுத்து நானும், பார்த்திபன் சாரும் எடுத்துக்கூறியதும், எனது பெற்றோர் அவ்வாறு நடிக்க சம்மதித்தனர். அதன்பின்னர் தான் அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, பலரையும் அது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என விளக்கம் அளித்துள்ளார் பிரிகிடா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com