

90-களில் பாலிவுட் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கஜோல். இவர் தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 51 வயதிலும் அழகு குறையாமல் வலம் வரும் கஜோல், படங்களில் முத்தக்காட்சியில் நடிக்கக் கூடாது என்ற கொள்கையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு ஓ.டி.டி. வெப் தொடரில் அவர் தனது கொள்கையை உடைத்து, சக நடிகரான ஜிசு செங்குப்தாவுடன் முத்தக்காட்சியில் நடித்தார். இதுகுறித்து கஜோல் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
"நேர்மையாகச் சொன்னால், கதைக்கு அது தேவையாக இருந்தது. கதாபாத்திரத்துக்கு அது முக்கியமானதாக இருந்தது. அது சாதாரண முத்தம் அல்ல. அந்த பெண்ணின் நம்பிக்கையை சொல்லும் இடம்.
அந்த முத்தக்காட்சி இல்லையென்றால், கதையில் தாக்கம் இல்லாமல் போய்விடும். இதனால் தான் மிகுந்த யோசனைக்கு பிறகு, என் கொள்கை முடிவில் இருந்து விலகி அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல கதைக்காக எதையும் செய்யலாம். அதைத்தான் நான் செய்தேன்” என்று கூறினார்.