சவாலான கேரக்டரை தேர்வு செய்தது ஏன்?- நடிகை அதிதி பாலன் பதில்

துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ என்ற வெப் தொடர் மே 15 ந் தேதி வெளியாக உள்ளது.
சவாலான கேரக்டரை தேர்வு செய்தது ஏன்?- நடிகை அதிதி பாலன் பதில்
Published on

சென்னை,

களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன், டோரா போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் இயக்குனர் சற்குணம். இவர் தற்போது துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடிப்பில் ‘எக்ஸாம்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை அதிதி பாலன், எனது முதல் திரைப்படமான 'அருவி' அமேசான் பிரைம் வழியாகவே வெளியானது. 'எக்ஸாம்' சீரிஸில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மிகவும் கடினமாக இருந்ததால், அதற்கு அதிகமான பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த தொடரில் எனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் 'கிரே ஷேட்ஸ்’ கொண்டதாக இருந்தது... இயக்குனர் சற்குணம் என்னுடைய கதாபாத்திரத்தை சொன்னபோது இதுபோன்ற சவாலான கேரக்டரில் இதற்கு முன்பு நடித்ததில்லை என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். என 'எக்ஸாம்' சீரிஸ் விழாவில் நடிகை அதிதி பாலன் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com