‘பாசில் ஜோசப் படத்தில் நடிக்காதது ஏன்?’ - சஞ்சு சாம்சன் சொன்ன காரணம்

சென்னையில் நடைபெற்ற ‘அதிரடி’ திரைப்பட விழாவில் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டார்.
‘பாசில் ஜோசப் படத்தில் நடிக்காதது ஏன்?’ - சஞ்சு சாம்சன் சொன்ன காரணம்
Published on

சென்னை,

பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'அதிரடி'. இந்த படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சஞ்சு சாம்சன், தனது நண்பர் பாசில் ஜோசப்புக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். முன்னதாக, இந்த படத்தில் நடிக்க சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இது குறித்து சஞ்சு சாம்சனிடம் கேட்டபோது, “எனக்கு மிகச்சிறிய கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். கொடுத்தால் பெரிய கதாபாத்திரமாக கொடுக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய பாசில் ஜோசப், “அவருக்கு ஆட்டோ டிரைவர் கதாபாத்திரம் கொடுத்தோம். அந்த ஆட்டோவின் பெயர் சிக்ஸ்ர்.” என்றார்.

இதற்கு சஞ்சு சாம்சன், “தமிழ்நாட்டில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரம் என்றாலே மாஸ் தான்” என்று கூறி, நடிகர் ரஜினிகாந்தைப் போல் சல்யூட் அடித்து காட்டினார். மேலும், பாசில் ஜோசப் பேசுகையில், தற்போது நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், தனது நண்பர் சஞ்சு சாம்சன் விளையாடும் சி.எஸ்.கே. அணிக்கே தனது ஆதரவு என்று குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com