இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த வராதது ஏன்…?- நடிகை ஊர்வசி விளக்கம்

பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாதது குறித்து நடிகை ஊர்வசி உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த வராதது ஏன்…?- நடிகை ஊர்வசி விளக்கம்
Published on

பாக்யராஜ் ஐஸ் பாக்ஸில் படுத்திருப்பதை பார்க்கும் சக்தி தனக்கு கிடையாது என்று நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்தது. தொடர்ந்து, திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் மூலம் நடிகை ஊர்வசியை அறிமுகப்படுத்தியவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏன் ஊர்வசி வரவில்லை என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஊர்வசியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஊர்வசி, “நான் அங்கு வந்தால் என்ன உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் எனத் தெரியும். அவரை அப்படி படுக்கையில் பார்க்க என்னால் முடியாது. என் எமோஷனலை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. அது பாக்யராஜ் சாரின் ஆத்மாவுக்குத் தெரியும். அவர்கள் குடும்பத்துக்குத் தெரியும். அவரின் மிகச்சிறந்த மாணவி நான்.

பூர்ணிமா பாக்யராஜிடம் பேசினேன். என்னை பொறுத்தவரை பெரிய அளவிலான பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. மீடியா முன்னால் ஓவர் எமோஷனலாகி, ஓவர் டிராமா கிரியேட் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது உண்மை என்று சிலரோ, பொய் என்று சிலரோ சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை.

நான் எப்போதும் சிரித்து பேச வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். நான் அழுவது பாக்யராஜுக்கு பிடிக்கவே பிடிக்காது. நான் வந்திருந்தால், அழுதிருப்பேனா.. அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கு எனக்கு சக்தி கிடையாது. என் மனதில் கோட் சூட் போட்டபடி அழகாக இருக்கிறார். அது போதும். அவரை ஐஸ் பாக்ஸில் பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com