படங்கள் நடிக்க தாமதம் ஏன்? - ஷ்ரத்தா ஸ்ரீநாத்


படங்கள் நடிக்க தாமதம் ஏன்? - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
x
தினத்தந்தி 8 Sept 2025 2:16 PM IST (Updated: 8 Sept 2025 2:21 PM IST)
t-max-icont-min-icon

கதைக்கு தேவையாக இருந்தால், மிகவும் முக்கியமான காட்சியாக இருந்தால் மட்டுமே நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் என்று நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர், ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘புரோ கோட்’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் படங்கள் நடிக்க தாமதம் ஏன்? என்பது குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் மனம் திறந்தார். அவர் கூறும்போது, “தரமான கதைகளுக்காக நான் காத்திருப்பது தான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன். கிடைத்த படங்களை எல்லாம் நடித்துவிட வேண்டும் என்பது என் ஆசையில்லை. என் ‘இமேஜ்’ சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு கதைகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறேன். என்னை நல்ல நடிகை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். அதை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். கதைக்கு தேவையாக இருந்தால், மிகவும் முக்கியமான காட்சியாக இருந்தால் மட்டுமே நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன்” என்றார்.

1 More update

Next Story