50 வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்

50 வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது தபு கூறியதாவது:-
50 வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
Published on

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே ஆகிய படங்களில் நடித்தவர் தபு, இந்தியிலும் முன்னணி நடிகை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது தபு கூறியதாவது:-

எனக்கு 50 வயது ஆகிறது. என்னை சந்திக்கும் எல்லோருமே ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் திருமணம் எப்போது என்றுதான் கேட்கின்றனர். கிட்டத்தட்ட 25 வருடமாக இதே கேள்வியை கேட்டு விட்டனர். திருமணம் பற்றி நான் பெரிதாக யோசிக்கவே இல்லை. நடப்பது நடக்கப்போவது எதுவாக இருந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைக்கிறேன். ஒரு வேளை நான் காதலை இழந்து விட்டேனோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ஒரு அற்புதமான அனுபவம்தான். எனது வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறேன் என்றும் தகவல்கள் பரவுகிறது. புத்தகம் எழுதும் அளவுக்கு சிறந்த விஷயங்கள் எனது வாழ்க்கையில் நடக்கவில்லை. இத்தனை நாள் சினிமாவில் நீடிப்பது பெரிய விஷயம். இந்த பயணத்தில் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துவிட்டேன். இப்போது ஓ.டி.டி தளத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. கதை பிடித்தால் நடிப்பேன்.

இவ்வாறு தபு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com