உடல் எடையை குறைக்காதது ஏன்? வித்யாபாலன் விளக்கம்

நடிகைக்கான தோற்றம் கவர்ச்சி இல்லாமல் கூட ஒரு திறமையான நடிகை என்று பெயர் எடுத்து இருக்கிறார் வித்யாபாலன்.
உடல் எடையை குறைக்காதது ஏன்? வித்யாபாலன் விளக்கம்
Published on

இந்தி பட உலகுக்கு குண்டான நடிகைகள் சரிப்படமாட்டார்கள் என்ற கருத்தையும் உடைத்து இருக்கிறார். குண்டாக இருந்தாலும் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:-

சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் தாக்கம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது. இது நல்ல வளர்ச்சி. வெள்ளித்திரையில் கதாநாயகர்கள் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. முன்னணி நடிகர்கள் படங்கள்தான் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்க முடியும் என்ற எண்ணமும் இருந்தது.

அது இப்போது மாறி உள்ளது. கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களும் கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் வர தொடங்கி உள்ளன. சகுந்தலா தேவி வாழ்க்கை கதையில் நடிக்கிறேன். அவரைபோல் எனது தோற்றத்தை மாற்றியுள்ளேன்.

எனக்கு ஒரு அரிய வியாதி காரணமாக எடை கூடியது. அதை குறைத்தால் இன்னும் சில பிரச்சினைகள் வரலாம் என்று டாக்டர்கள் சொன்னதால் எடையை குறைக்கவில்லை. இதற்கு மேல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறேன். எடை கூடியதால் வாய்ப்புகள் வராமல் இல்லை. முன்பை விட அதிக படங்கள் வருகின்றன

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com