இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை மும்தாஜ் விளக்கம்

நான் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன் என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார்.
இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை மும்தாஜ் விளக்கம்
Published on

சென்னை,

டி.ராஜேந்தர் இயக்கிய 'மோனிஷா என் மோனலிசா' படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் மும்தாஜ். மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, ஸ்டார், வேதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் குத்தாட்ட பாடல்களிலும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது படங்களில் நடிக்கவில்லை. 43 வயதாகியும் இன்னும் திருமணமும் செய்து கொள்ளவில்லை. ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இது குறித்து மும்தாஜ் அளித்துள்ள பேட்டியில், "நான் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் இறைவனை நாட தொடங்கினேன். நான் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி பலவாறு பேசுகிறார்கள். எனக்கு 25 வயது இருக்கும் போது 'ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்' நோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இதுதான் நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம்.

மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது, எனக்கும் அப்படி இருக்க தோன்றுகிறது. ஆனால் மனரீதியாக நான் அதற்கு தயாராக இல்லை என்பதே உண்மை" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com