திருமணத்தை ரத்து செய்தது ஏன்? - நடிகை ராஷ்மிகா விளக்கம்

திருமணத்தை ரத்து செய்தது குறித்து நடிகை ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.
திருமணத்தை ரத்து செய்தது ஏன்? - நடிகை ராஷ்மிகா விளக்கம்
Published on


தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் பிரபலமான ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு கன்னட மொழியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி ரத்தாகி விட்டது. இதுகுறித்து ராஷ்மிகா கூறியதாவது:-

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு வரப்போகிற கணவர் சினிமா துறையில் இல்லாதவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் ரக்ஷித் வித்தியாசமாக இருந்தார். அவர் மீது எனக்கிருந்த காதல் காரணமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். தொழில் ரீதியாக இருவரும் பெயர் வாங்க வேண்டும் என்றால் திருமணத்துக்கு 2 ஆண்டுகள் காத்து இருப்போம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தபிறகும் வாய்ப்புகள் அதிகம் வந்ததால் திருமணத்துக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. திருமணம் செய்தால் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதுபோல் ஆகி விடும். எனவே அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று திருமணத்தையே ரத்து செய்து விட்டேன். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com