ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- இன்று விசாரணை

தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- இன்று விசாரணை
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் சித்ர துர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டி மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிறைவாசம் அனுபவித்து வரும் தர்ஷன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் சிறையில் தனக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை, தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன், குடும்பத்தினரை சந்திக்க அனுமதிப்பதில்லை, என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார். அத்துடன் பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ரேணுகாசாமி கொலை வழக்கில் சாட்சிகளிடம் தாமதமாக விசாரணை நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது தர்ஷன் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை அளிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கோர்ட்டில் இதுவரை சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை?, எத்தனை பேரிடம் விசாரணை நடந்துள்ளது?,விசாரணை முடிய இன்னும் எவ்வளவு நாள் ஆகும், சிறையில் தர்ஷனுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் விசாரணையின் போது தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா?, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com