அஜித்தின் வலிமை 2-ம் பாகம் வருமா?

வலிமை படத்தை தயாரித்துள்ள போனிகபூர் அளித்துள்ள பேட்டியில் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் அளவுக்கு வலிமை படத்தின் திரைக்கதை உள்ளது என்று கூறியுள்ளார்.
அஜித்தின் வலிமை 2-ம் பாகம் வருமா?
Published on

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் கியூமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார். கார்த்திகேயா வில்லனாக வருகிறார். சுமித்ரா, யோகிபாபு உள்ளிட்ட மேலும் பலர் படத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வலிமை படத்தை தயாரித்துள்ள போனிகபூர் அளித்துள்ள பேட்டியில் வலிமை படம் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலை கொண்டதாக இருக்கும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட் நுனிக்கு இழுக்கும். அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் அளவுக்கு வலிமை படத்தின் திரைக்கதை உள்ளது'' என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் வலிமை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்குமார் நடித்துள்ளார். அந்த படம் நல்ல வசூல் பார்த்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com