நிதின், கீர்த்தி சுரேஷின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ''எல்லம்மா''?


Will ‘Balagam’ Venu’s Yellamma end the flop streak for Nithiin and Keerthy Suresh?
x

கீர்த்தி சுரேஷ் ''தசரா''வுக்குப் பிறகு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறார்.

சென்னை,

நிதின், பாக்ஸ் ஆபீஸில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அவரது சமீபத்திய படமான ''தம்முடு''வை ''வக்கீல் சாப்''பின் வேணு ஸ்ரீராம் இயக்கியிருந்தாலும், வரவேற்பை பெற தவறிவிட்டது.

கீர்த்தி சுரேஷும் ''தசரா''வுக்குப் பிறகு இதேபோன்ற சரிவைச் சந்தித்து வருகிறார். அவரது சமீபத்திய படங்களும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

இப்போது, ''பாலகம்'' புகழ் வேணு யெல்டாண்டி இயக்கவிருக்கும் ''எல்லம்மா'' மீது அனைத்து நம்பிக்கைகளும் உள்ளன. இப்படத்தில் நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை நானி மற்றும் சாய் பல்லவி நிராகரித்ததாகக் கூறப்படும்நிலையில், இவர்கள் இணைந்திருப்பதாக தெரிகிறது.

இரு நட்சத்திரங்களுக்கு ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி மிகவும் அவசியம் என்பதால், ''எல்லம்மா'' அதனை செய்யும் என்ற நம்பிக்கையில் இருவரது ரசிகர்களும் உள்ளனர். இருப்பினும், நிதின், கீர்த்தி சுரேஷின் தொடர் தோல்விக்கு ''எல்லம்மா'' முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.

1 More update

Next Story