சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை

சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
Published on

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சி சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இதன் மூலம் இந்துக்கள் உணர்வை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. 'பதான்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 'பதான்' படத்துக்கு தடை விதிக்க ஆலோசனை நடக்கிறது. 'பதான்' படத்தை தணிக்கை செய்தவர்களும் விமர்சனங்களில் சிக்கி உள்ளனர். எதிர்ப்பு வலுப்பதால் 'பதான்' படத்தை மீண்டும் தணிக்கை செய்ய இருப்பதாக தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்து உள்ளார். படைப்புகள் பொதுமக்களை புண்படுத்துவதாக இருக்க கூடாது என்றும் கூறியுள்ளார். 'பதான்' படத்தை தணிக்கை குழு மீண்டும் தணிக்கை செய்வதற்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com