உங்கள் படங்களை இயக்குனர் ஷங்கர் பார்ப்பாரா? - நடிகை அதிதி பதில்

கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர்.
சென்னை,
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார்.
நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார். தற்போது இவர் தெலுங்கில் அறிமுகமாக போகிறார். பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஜோடியாக 'பைரவம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
விஜய் கனகமெடலா இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசனுக்காக அதிதி ஷங்கர் ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது அதிதியிடம் உங்கள் படங்களை இயக்குனர் ஷங்கர் பார்ப்பாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அதிதி, 'அவருக்கு வேறு வாய்ப்பு கிடையாது. அவர் என்னுடைய படங்களை பார்க்கவில்லை என்றால் சண்டையிடுவேன்' என்றார்.






