கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?


கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?
x

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இதற்கிடையில், "வா வாத்தியார்" படம் வருகிற டிசம்பர் 5ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாமால் உள்ளது. இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வா வாத்தியார் படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற அமேசான் நிறுவனம் டிசம்பரில் படத்தை வெளியிட வேண்டும், இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் எப்படியாவது இப்படத்தினை வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழுவினர் இறங்கியிருக்கிறார்கள்.

1 More update

Next Story