லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவில் இணைகிறாரா ராம் சரண்?

எல்.சி.யுவில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Will Lokesh connect Ram Charan to LCU
Published on

சென்னை,

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினிகாந்த்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், லோகேஷ் கனகராஜ் 'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் மற்றும் தயாரிக்கும் 'பென்ஸ்' படமும் எல்.சி.யு வின் கீழ் உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ் படங்களை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த எல்.சி.யுவில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கே.வி.என் புரொடக்சன் தயாரிப்பில் 3 படங்களை லோகேஷ் இயக்க இருப்பதாகவும் அதில் ஒரு படத்தில் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற 2 படங்கள் கைதி 2, ரோலக்ஸ் என தெரிகிறது. இதன் மூலம் எல்.சி.யுவில் ராம் சரண் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தொடர்ந்து, தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com