மீண்டும் நடிக்கும் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ

தமிழ், தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. நீண்ட இடைவெளிக்கு பிறகு வாணிஸ்ரீ மீண்டும் நடிக்க வருகிறார்.
மீண்டும் நடிக்கும் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ
Published on

தமிழ், தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. அவர் நடித்துள்ள வசந்த மாளிகை படம் இப்போதும் திரைக்கு வந்து வசூல் அள்ளுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வாணிஸ்ரீ மீண்டும் நடிக்க வருகிறார். தெலுங்கில் பிரேம் நகர் என்ற டி.வி. தொடரில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அடுத்து சினிமாவிலும் நடிக்க உள்ளார்.

வாணிஸ்ரீ அளித்த பேட்டி வருமாறு:-

சாவித்திரியை நடிப்பதற்காகவே கடவுள் படைத்தார். அவர் நிலா மாதிரி. நாங்கள் வெறும் நட்சத்திரங்கள். பானுமதி, கண்ணம்மா, சாவித்திரி ஆகிய 3 பேரையும் யாருடனும் ஒப்பிட முடியாது. எல்லோரும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவர்கள்தான். நான் இப்போது வரும் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன்.

இன்றைய நடிகைகள் சிறப்பாக நடிக்கிறார்கள். அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா ஆகியோர் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்கிறார்கள். நான் சிவாஜியுடன் நடித்த வசந்த மாளிகை பெரிய வெற்றிபெற்றது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகினேன். குஷ்பு, சுஹாசினி உள்பட பலர் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். எனது மகளும் நடிக்கும்படி கூறினார். இதனால் நாகேஷ்வரராவின் அன்னபூர்ண நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு டி.வி. தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி உள்ளேன். அந்த கால நடிகைகளில் நான் மட்டும்தான் கருப்பாக இருந்தேன். ஆனாலும் நடிப்பையும், அழகையும் கடவுள் எனக்கு கொடுத்து இருந்தார். இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com