அல்லு அர்ஜுனுக்கு எதிரியாகும் ராஷ்மிகா? 'ராக்கா' படத்தில் புதிய திருப்பம்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'ராக்கா' திரைப்படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுனுக்கு எதிரியாகும் ராஷ்மிகா? 'ராக்கா' படத்தில் புதிய திருப்பம்
Published on: 

சென்னை,

ஏற்கெனவே இப்படத்தில் தீபிகா படுகோனே முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது

மீண்டும் இணையும் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா

'ராக்கா' திரைப்படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரமா?

இந்த நிலையில், 'ராக்கா' படத்தில் ராஷ்மிகா முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீபிகா படுகோனேவின் கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாகவும், பாதுகாப்பு அளிப்பவராகவும் அவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவரது கதாபாத்திரத்தில் எதிர்மறை சாயல்களும் இருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், ராஷ்மிகா வில்லியாக நடிக்கிறாரா என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

படப்பிடிப்பில் ராஷ்மிகா

தம்மா படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட இடுப்பு காயத்திலிருந்து குணமடைந்த ராஷ்மிகா, மீண்டும் மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com