

நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பலாத்காரமும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் பொதுமக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அதிகரித்து இருக்கிறது.
இந்த வேளையில், ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால், நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பலாத்காரமும் குறையும்.
இவ்வாறு டைரக்டர் பேரரசு கூறியிருக்கிறார்.