ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
Published on

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப்போவதாகவும், அந்த படத்துக்கு பாடல் எழுதுவதாகவும் தகவல் பரவி உள்ளது. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை அழைக்கவும் இல்லை. அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆசை. சமூக விஷயங்களை பேசும் அழுத்தமான கதைகள் வந்தாலும் நடிப்பேன்.

கனா, வேலைக்காரன், ஹீரோ படங்களில் சமூக விஷயங்கள் இருந்தன. நான் நடித்துள்ள டான் படம் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும்.

சினிமா இப்போது ஆரோக்கியமாக உள்ளது. ஓ.டி.டி.யிலும் படம் பார்க்கிறார்கள். தியேட்டர்களுக்கு வந்தும் பார்க்கிறார்கள்.

எனது படங்கள் பல கோடிகள் வசூலிக்கிறது என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை. நியாயமான சம்பளம் வாங்குகிறேன். எனக்கு பிடித்த கதையில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com