அல்லு அர்ஜுன் - அட்லீ படம்...வில்லனாக இந்த ஹாலிவுட் பிரபலமா?


Will Smith in talks to play antagonist in Atlee-Allu Arjun’s AA22xA6
x

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.

சென்னை,

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஏஏ22xஏ6 திரைப்படம், பான் இந்திய அளவில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் உள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில், ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித்திடம் ''வில்லன்'' கதாபாத்திரத்திற்காக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக டுவைன் ஜான்சனையும் பரிசீலித்து வருவதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.


1 More update

Next Story