

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது கிடைத்தது. சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் தனது மனைவி ஜடா பிங்கெட்டுடன் பங்கேற்றபோது ஜடாவின் மொட்டை தலையை நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். இதனால் கோபமான வில் ஸ்மித், மேடைக்குச் சென்று, கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து ஆஸ்கர் அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில்ஸ் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்த சம்பவம் காரணமாக வில்ஸ் ஸ்மித் நடித்து விரைவில் திரைக்கு வர தயாராக இருந்த எமன்ஸிபேஷன் என்ற ஹாலிவுட் படத்தின் ரிலீசை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் சாட்டை அடியில் இருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்த அடிமையின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதில் தப்பி ஓடிய அடிமை கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்துள்ளார்.