'ஜன நாயகன்' ரிலீஸால் ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட வெளியீட்டில் மாற்றம்?

’ஜன நாயகன்’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்மா
Published on

சென்னை,

ஜேசன் சஞ்சய் இயக்கி இருக்கும் 'சிக்மா' திரைப்படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘சிக்மா’

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது.

’ஜன நாயகன்’

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ’ஜன நாயகன்’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள 'சிக்மா' திரைப்படம் ஆகஸ்டிற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிலீஸ் தேதி மாற்றம்?

ஜனநாயகம் திரைப்படத்தோடு 'சிக்மா' திரைப்படத்தை வெளியிட்டால் தியேட்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக லைக்கா நிறுவனம் கருதுவதால் ரிலீஸ் தேதியை மாற்ற ஆலோசித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com