"இந்தியன் 3" படப்பிடிப்பு பணி தொடங்குமா?

"இந்தியன் 3" படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
"இந்தியன் 3" படப்பிடிப்பு பணி தொடங்குமா?
Published on

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. எனவே இயக்குனர் ஷங்கர் இந்தியன் 3 படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது,  'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஷங்கர் தரப்பில் விசாரித்த போது, "இந்தியன் 3 படம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com