ரஜினியின் எந்திரன் 3-ம் பாகம் வருமா?

ரஜினியின் எந்திரன் 3-ம் பாகம் வருமா?
Published on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து.

இந்த நிலையில் ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் மூன்றாம் பாகத்தை 3.0 என்ற பெயரில் படமாக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். அடுத்து மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு ஜெய்பீம் படத்தை எடுத்த ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது ரஜினிக்கு 170-வது படம்.

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் அது ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது எந்திரன் 3-ம் பாகத்திலும் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து வருவதாகவும் பேசுகின்றனர். எந்திரன் 3-ம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com