பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா?

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனே இயக்குகிறார்.
சென்னை,
பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இப்படத்தை அடுத்து பிரபல தாயரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதனையடுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், அதுபற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இதில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மீனாட்சி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூரவ் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.







