படுக்கை அறைக்கே வருவீர்களா? புகைப்படம் எடுத்தவர்கள் மீது சயீப் அலிகான் பாய்ச்சல்

படுக்கை அறைக்கே வருவீர்களா? புகைப்படம் எடுத்தவர்கள் மீது சயீப் அலிகான் பாய்ச்சல்
Published on

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சயீப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தி நடிகை மலைகா அரோராவின் தாயார் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் சயீப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். விருந்து முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.

அப்போது வீட்டின் எதிரே சில போட்டோகிராபர்கள் காத்து நின்றனர். சயீப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர்.

இதனால் கோபமான சயீப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கத்தினார். உடனே போட்டோகிராபர் பின்வாங்கினர். பின்னர் போட்டோகிராபர்களை பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்று கதவை ஓங்கி சாத்திக்கொண்டார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com