அரசியலில் நுழைவீர்களா? கேள்விக்கு நடிகை திரிஷா கொடுத்த ரியாக்சன்

சென்னையிலிருந்து விமானம் மார்க்கமாக கோவை வந்தடைந்த நடிகை திரிஷாவுக்கு கோவை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசியலில் நுழைவீர்களா? கேள்விக்கு நடிகை திரிஷா கொடுத்த ரியாக்சன்
Published on: 

கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகை திரிஷாவிடம் வரும் காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று அங்கிருந்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் 20 வருடங்கள் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக இணையதளங்களில் தகவல் வெளியானது.

43 வயதை நெருங்கும் திரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. கடுமையான உடற்பயிற்சிகள் , பாக்ஸிங் மற்றும் முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தனது உடலமைப்பை இளமையுடன் பராமரித்து வருகிறார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் தொடர்ந்து நீடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், லியோ, கருப்பு போன்ற பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மார்க்கமாக கோவை வந்தடைந்தார் நடிகை திரிஷா. அவருக்கு கோவை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கார் மூலமாக சென்ற திரிஷா, சுமார் 4 மணியளவில் கோவை காந்திபுரம் அடுத்த 100 அடி சாலையில் தனியார் மொபைல் கடையினை திறந்து வைதார்.

திரிஷாநடிகை திரிஷா வருகையை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் திரிஷா வருகை காரணமாக மொபைல் கடையில் பாதுகாப்பு பணியில் அதிகமாக பவுன்சர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.

அரசியலில் நுழைவீர்களா?

இந்நிலையில், கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகை திரிஷாவிடம் வரும் காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று அங்கிருந்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு நடிகை திரிஷா சென்றார்.

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேஸை முதல்-அமைச்சர் விஜய் பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷாவின் வீடியோ வைரலானது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com