'எல்.கே.ஜி.' படத்தை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?- ஆர்ஜே பாலாஜி ஓபன்டாக்

நானும் அந்தக் கூட்டத்தில் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று ஆர்ஜே பாலாஜி பேசினார்

 'எல்.கே.ஜி.' படத்தை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?- ஆர்ஜே பாலாஜி ஓபன்டாக்
Published on

சென்னை,

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜியிடம், இப்போதெல்லாம் நான் நிறைய மாறிவிட்டேன், அந்த ஐடியாவே எனக்கு சுத்தமாக கிடையாது என்று பேசினார்.

ரேடியோ ஜாக்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது. இந்தப் படம் ரூ.300 கோடி வசூலித்துக் கலக்கியது. தற்போது புதிய படங்களில் நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிய கதையையும் எழுதி வருகிறார்.

நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜியிடம், 'எல்.கே.ஜி.' படத்தை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? அந்த எண்ணம் உண்டா? என்று கேட்கப்பட்டது.

அந்த ஐடியாவே எனக்கு கிடையாது

அதற்கு ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, “ஏற்கனவே நிறைய பேர் வந்துட்டாங்க... நானும் அந்தக் கூட்டத்தில் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை. அந்த ஐடியாவே எனக்கு சுத்தமாக கிடையாது”, என்றார். மேலும் அவர் பேசும்போது. “இப்போதெல்லாம் நான் நிறைய மாறிவிட்டேன். முன்பெல்லாம் எனக்கு கோபம் நிறையவே வரும். இப்போது பக்குவமாகி வருகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com