சீதா ராமம் 2-ல் நடிக்க விருப்பம் - மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் 2-ல் நடிக்க விருப்பம் - மிருணாள் தாக்கூர்
Published on

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடித்து கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியான சீதா ராமம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் படத்தை எடுத்து இருந்தனர்.

காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அவளுடன் அவரால் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை உருக்கமாக படமாக்கி இருந்தனர். காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாக்கூர் நடித்து இருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய மிருணாள் தாக்கூரிடம் சீதா ராமம் 2-ம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மிருணாள் தாக்கூர் கூறும்போது, "எனக்கு சீதா ராமம் 2-ம் பாகம் வருமா என்று எந்த யோசனையும் இல்லை. ஆனால் அந்த படம் உருவானால் அதில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com