“வித் லவ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தின் ‘அய்யோ காதலே’ பாடல் நாளை வெளியாகிறது.
“வித் லவ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு
Published on

சென்னை,

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வித் லவ் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வித் லவ் படத்தின் அய்யோ காதலே பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com