“வித் லவ்” படம் நிச்சயமாக வெற்றி பெறும் - நடிகர் மணிகண்டன்

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6ந் தேதி வெளியாகிறது.
“வித் லவ்” படம் நிச்சயமாக வெற்றி பெறும் -  நடிகர் மணிகண்டன்
Published on

சென்னை,

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ‘வித் லவ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘வித் லவ்’ படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் மணிகண்டன், “2 நாள்களுக்கு முன்பே ‘வித் லவ்’ திரைப்படத்தைப் பார்த்தேன். நல்ல அனுபவமாகவே இருந்தது. சாதாரண கதையை மிகச்சிறப்பாக எடுத்திருக்கின்றனர்.ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமையாக இருந்ததுடன் அபிஷனின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. எதிர்காலத்திற்கு சென்று சொல்கிறேன், இப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com