"பிரியமுடன் தலைவர்"- ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த அனஸ்வரா ராஜன்

‘வித் லவ்’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
"பிரியமுடன் தலைவர்"- ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த அனஸ்வரா ராஜன்
Published on

சென்னை,

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படம் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறுப்படுகிறது.

இந்த நிலையில், தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வரும் ‘வித் லவ்’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில், நடிகை அனஸ்வரா ராஜன், ரஜினிகாந்த்துடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "பிரியமுடன் தலைவர்" என்றும் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com