

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து ஏற்கனவே தனது மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மாநில மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.