

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முதன்முதலாக, துப்பாக்கி படத்தில் இணைந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டு பேரும் கத்தி படத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்கள். அந்த படமும் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக, சர்கார் படத்தில் இணைந்தார்கள்.
சர்கார் படமும் வெற்றி பெற்றதால், அடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது, துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்று பேசப்படுகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய இருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யும் வகையில், ஆடல்-பாடல் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக தயாராக இருக்கிறது.