முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த ரசிகரை விரட்டிய நடிகை

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த ரசிகரை விரட்டிய நடிகை
Published on

அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஏற்கனவே மல்யுத்த வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவை கண்டித்தார். சமீபத்தில் லண்டன் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.

இந்த நிலையில் மும்பையில் ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றார். அந்த ரசிகர் முக கவசம் அணியாததால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ராக்கி சாவந்த் மறுத்ததுடன் அவரை கடுமையாக கண்டித்து விரட்டவும் செய்தார். அந்த ரசிகரை பார்த்து முக கவசம் அணியாமல் என்னுடன் செல்பி எடுக்க முடியாது. முக கவசம் அணியுங்கள். உங்களை போன்றவர்களால்தான் மும்பையில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com