தெலுங்கு நடிகர் ராஜ் தருண் மீது மோசடி புகார்

தெலுங்கு நடிகர் ராஜ் தருண் மீது அவரது பெண் நண்பர் லாவண்யா மோசடி புகார் அளித்துள்ளார்
தெலுங்கு நடிகர் ராஜ் தருண் மீது மோசடி புகார்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் ராஜ் தருண் 2013-ம் ஆண்டு 'உய்யால ஜம்பாலா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த திரைப்படத்திற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான விருதை வென்றார் .

தெலுங்கு திரைப்பட நடிகர் ராஜ் தருண், தனது லிவ்-இன் பார்ட்னரை ஏமாற்றியதாகக் கூறி அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசில் அவரது பெண் நண்பர் அளித்த புகாரில், தானும் ராஜ் தருணும் 10 ஆண்டுகளாக காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன்னை வேறொரு பெண்ணுடன் சேர்ந்து ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது பெண் நண்பர் லாவண்யா நடிகர் ராஜ் தருணுடன் வாழ விருப்பம் தெரிவித்தார்.

புகாரை விசாரித்து வருவதாகவும், புகார்தாரர் ஏதேனும் ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com