மறைந்த ஒளிப்பதிவாளர் செழியனின் படைப்புக்கு ஜப்பானில் கவுரவம்!

செழியன் இயக்கிய 'காகித மலர்' படத்துக்கு ஜப்பானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவம் தரப்பட்டிருக்கிறது.
மறைந்த ஒளிப்பதிவாளர் செழியனின் படைப்புக்கு ஜப்பானில் கவுரவம்!
Published on: 

சென்னை,

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடந்த 39-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஏசியன் பியூச்சர் பிரிவில் உலக திரையிடலுக்காக 'காகித மலர்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, 2 காட்சிகள் திரையிடப்பட்டன.

ஒளிப்பதிவாளர் செழியன்

'கல்லூரி', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்', 'கொன்றால் பாவம்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். ஒளிப்பதிவாளர் என்பதை தாண்டி 'டூலெட்”, 'காகித மலர்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக செழியன் (வயது 57) கடந்த ஜூலை மாதம் சென்னையில் உயிரிழந்தார்.

டோக்கியோவில் 'காகித மலர்' திரைப்படம்

இந்தநிலையில் செழியன் இயக்கிய 'காகித மலர்' படத்துக்கு ஜப்பானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவம் தரப்பட்டிருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 39-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஏசியன் பியூச்சர் பிரிவில் உலக திரையிடலுக்காக 'காகித மலர்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, 2 காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் செழியனின் மனைவியும், படத்தின் தயாரிப்பாளருமான பிரேமா, மகள் அதிதா ஆகியோரும் பங்கேற்றனர்.

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா கூறும்போது, "பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பலரும் பாலிவுட் திரைப்படங்களைத்தான் நினைக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டைத் தாண்டியும் இந்தியாவில் பல்வேறு வகையான தனித்துவமான திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்குக் காட்டவே இந்தப் படத்தைத் தேர்வு செய்தோம்", என்றார்.

X