

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983-ல் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இதனை மையமாக வைத்து 83 என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அந்த அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும், சந்தீப் பட்டிலாக அவரது மகன் சீரங்கும் நடிக்கின்றனர்.