வில்லனாக நடிப்பீர்களா?.. சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய பதில்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம், வில்லனாக படம் நடிப்பீர்களா? வில்லன் வேடம் உங்களுக்கு செட் ஆகுமா?" என்று கேட்கப்பட்டது.
வில்லனாக நடிப்பீர்களா?.. சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய பதில்
Published on: 

சென்னை,

என்னை பொறுத்தவரை வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பொழுதுபோக்கு தரும் வகையில், கலகலப்பு ஏற்படுத்தும் வகையிலான வில்லன் வேடமாக இருந்தால் நடிப்பேன். என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 'மெரினா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்

'அமரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான 'மதராஸி' மற்றும் 'பராசக்தி' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டில் (2027) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

வில்லனாக படம் நடிப்பீர்களா?

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம், வில்லனாக படம் நடிப்பீர்களா? வில்லன் வேடம் உங்களுக்கு செட் ஆகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு, "நானே அப்படி யோசித்தது கிடையாது. என்னை பொறுத்தவரை வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பொழுதுபோக்கு தரும் வகையில், கலகலப்பு ஏற்படுத்தும் வகையிலான வில்லன் வேடமாக இருந்தால் நடிப்பேன். இரட்டை வேடமாக இருந்து அதில் ஒன்று வில்லனாக இருந்தாலும் ஏற்று நடிக்க தயார் தான். ஆனால் அந்தக்கதை என்னை தாக்கவேண்டும். அப்படிப் பட்ட கதை அமைந்தால் பார்க்கலாம்”, என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com