குழந்தையை பற்றி இப்படியெல்லாமா கேட்பீர்கள்..? - நடிகை இந்திரஜா வேதனை

சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பத்தைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து இந்திரஜா மனவேதனையுடன் பேசியுள்ளார்.
குழந்தையை பற்றி இப்படியெல்லாமா கேட்பீர்கள்..? - நடிகை இந்திரஜா வேதனை
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் ‘பாண்டியம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இந்திரஜா. இவர், மறைந்த பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மகளாகவும் அறியப்படுகிறார்.

நடிகை இந்திரஜா, 2024ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு “நட்சத்திரன்” என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பத்தைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து இந்திரஜா மனவேதனையுடன் பேசியுள்ளார்.

அதில், “என்னுடைய திருமணத்திலிருந்து இதுவரை பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். குறிப்பாக, என் குழந்தையைப் பற்றி வாடகை தாய் மூலம் பெற்றதாகவும், டெஸ்ட் ட்யூப் பேபி என்றும் பலர் பேசுகிறார்கள். உண்மை என்ன என்பதை அறியாமல் இவ்வாறு பேசுவது மிகவும் வேதனை அளிக்கிறது,” என்று கூறினார். மேலும், “ஒரு பெண் தாயாக மாறும் போது, அவள் சந்திக்கும் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையை அறியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்,” எனவும் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com